பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரும்பாத ஜனாதிபதி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_528.html
20ம் திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமையளிக்காது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதனை ஜனாதிபதி விரும்பவில்லை.
இதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 112 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பெரும்பான்மை வாக்குகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை கலைக்கப்படும்.
எவ்வாறனெனினும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜனாதிபதி அவ்வளவு விருப்பம் காட்டவில்லை.
இதன் அடிப்படையில் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் மட்டும் பேசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டால் அமைச்சரவையில் 20ம் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.