இலங்கையுடன் எப்போதும் பாகிஸ்தான் இணைந்திருக்கும்!- பாகிஸ்தான் இராணுவ தளபதி
தமது நாடு எப்போதும் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் தொடர்பில் இலங்கையுடன் இணைந்திருக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_213.html

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ரஹீல் செரீப் இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
நேற்று கொழும்பில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது இந்த உறுதிப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிறந்த உறவுள்ளது.
இந்தநிலையில் தமது சகோதர நாடு என்ற வகையில் இலங்கையுடன் தொடர்ந்தும் நற்புறவுடன் பாகிஸ்தான் செயற்படும் என்று ரஹீல் குறிப்பிட்டார்.
இலங்கையிலும் பாகிஸ்தானிலும் உள்நாட்டு பிரச்சினைகளால், இராணுவ கட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இதேவேளை, பாகிஸ்தானில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேர்ப்-இ-அஸ்ப் இராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும் பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியி;ட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate