சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாயம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்றதும் ய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_210.html
உலகப் புகழ்பெற்றதும் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படவேண்டிய உலகின் வரலாற்று பாரம்பரியங்களுள் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சிகிரியா ஓவியங்களை தொல்பொருளியல் திணைக்களம் முறையாகப் பாதுகாக்கவில்லை.
இதனாலேயே அவ் ஓவியங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிகிரியாவில் பல ஓவியங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் தற்போது 22 ஓவியங்களே இருக்கின்றன. இவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன.
இலங்கையின் முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும் சிகிரியா ஓவியங்களைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை குறிப்பிடத்தக்களவு நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.