எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கமுடியாது: உதய கம்மன்பில
நாட்டிற்குள் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_885.html
ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்தவொரு நாட்டின் மீதும் அழுத்தங்களை பிரயோகிக்கக் முடியாது.
நாடுகளை ஆட்சி செய்ய ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையை பின்பற்றி வருகின்றது.
ஆட்சி அதிகாரம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இடமளிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி 19ம், 20ம் திருத்தச் சட்டங்கள் குறித்து பேசியிருக்கின்றார்.
எவ்வாறேனும் சர்வதேச விசாரணைகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கமுடியாது. புலி ஆதரவாளர்கள்,எமது படைவீரர்களை வேட்டையாட முயற்சிக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இந்தக் கருத்துக்களை கம்மன்பில வெளியிட்டிருந்தார்.