ஐ.தே.கவுடன் இணைவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...


பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் கூடியுள்ளனர்.
அங்கு இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு வழங்குவதில் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த ஒப்பந்தங்களினாலே இவ்வாறான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம் தலைமையில் மேலும் பல கலந்துரையாடல்கள் இடம்றெவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.