நேபாள நிலநடுக்கம்: பலியோனார் எண்ணிக்கை 3200 ஐ தாண்டியது

நேபாள நிலநடுகத்தில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேப...

நேபாள நிலநடுக்கம்: பலியோனார் எண்ணிக்கை 3200 ஐ தாண்டியது
நேபாள நிலநடுகத்தில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேபாளத்தை நேற்று முன்தினம் கடுமையான பூகம்பம் தாக்கியது.

தலைநகர் காட்மாண்டுவில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாக கொண்டு, 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது.

2 கோடியே 80 லட்சம் மக்கள் வாழும் நேபாளத் தில் கடந்த 81 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தேசிய அழிவாக இது கருதப்படுகிறது.

அங்கு மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 3218 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவமும், விமானப்படையும் மீட்பு பணியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மழை, மற்றும் புதிய பூமி அதிர்வுகளால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவில் மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தாய்நாடு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் நேற்று இரவு முழுவதையும் கழித்தனர்.

Related

ஆப்கானில் 33 பேரைப் பலி வாங்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ISIS

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜாலாலாபாத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு அருகே சனிக்கிழமை நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 33 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் இருந்தன...

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழக...

ஆசிய விருது வழங்கல் விழாவில் கௌரவிக்கப்பட்ட குமார் சங்கக்கார

இலண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கல் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காரவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா (Asian Awards) நேற்று (17) இலண்டனிலுள்ள Grosve...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item