Give Support to News first to help the People of Nepal நியூஸ் பெர்ஸ்ட், எம்.ரி.வி. எம்.பி.சி இனால் “நேபாளத்திற்காக இலங்கை” நிவாரணத் திட்டம் ஆரம்பம்
நியூஸ் பெர்ஸ்ட், எம்.ரி.வி. எம்.பி.சி இனால் “நேபாளத்திற்காக இலங்கை” நிவாரணத் திட்டம் ஆரம்பம் நேபாளத்தில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ...


நியூஸ் பெர்ஸ்ட், எம்.ரி.வி. எம்.பி.சி இனால் “நேபாளத்திற்காக இலங்கை” நிவாரணத் திட்டம் ஆரம்பம்
நேபாளத்தில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி “நேபாளத்திற்காக இலங்கை” எனும் தலைப்பில் நிவாரணத் திட்டமொன்றை முன்னெடுக்க நியூஸ் பெர்ஸ்ட் எம்.ரி.வி. எம்.பி.சி ஊடக வலையமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கையின் நட்பு நாடான நேபாளத்தில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக தேவைப்படும் பால்மா, குடிநீர், போர்வை, புதிய ஆடை என்பன சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்களை விமானம் மூலம் நேபாளத்திற்கு கொண்டுசெல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலக்கம் 330 ரி.பி.ஜாயா மாவத்தை கொழும்பு 10 என்ற முகவரியில் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.
சிரச வெசாக் வலயம் இடம்பெறவுள்ளதால் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையகத்தில் நிவாரணப் பொருட்கள் பொறுப்பேற்கப்பட மாட்டாது எனவும் எம்.ரி.வி. எம்.பி.சி ஊடக வலையமைப்பின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.