கொழும்பில் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, பலர் காயம், தொடரும் பதற்ற நிலை
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது இனந் தெரியாத நபர்களால் மேற்கொள...

மேலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளார்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதாவது தேர்தல் பிரசாத்தின் போது பட்டாசுகளை கொழுத்தி கொண்டு இருந்த போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
