ஏடன் நகரில் கடும் மோதல்கள் , அரச நிலைகளைக் கைப்பற்ற ஹூத்திகள் முயற்சி
யெமெனின் தெற்கு நகரமான ஏடன் நகருக்கு உள்ளே கடும் சண்டைகள் நடைபெற்றுவருகின்றன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கைப்பற்ற டாங்கிகள...


நகரின் மையத்தில் ஷெல் தாக்குதல்கள் நடத்திய ஹுத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இன்று விடியற்காலை ஒரு விமான தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சில பகுதிகளிலிருந்து ஹுத்திக்கள் வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யெமெனின் முன்னாள் தலைவர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான ஹுத்திக்களை மட்டும் தாம் இலக்கு வைப்பதாக சௌதி தலைமையிலான கூட்டு ராணுவப் படையின் சார்பில் பேசவல்ல ஜெனரல் அஹ்மத் அஸிரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஏடென் நகரின் கிழக்கே உள்ள அல்-முகாலா நகரிலும் சண்டைகள் நடந்துள்ளன. அங்கிருந்த சிறைக்குள் நுழைந்த அல் கைதா கிளர்ச்சிக்காரர்கள், 300 கைதிகளை விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது