யெமனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி ஆரம்பம்

யெமென் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியுள்ளது. ஏடனில் உள்ள இந்தியர்கள் இந்திய விமானப் படையின் விமானம் மூலமாக வி...

யெமென் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியுள்ளது.

ஏடனில் உள்ள இந்தியர்கள்
இந்திய விமானப் படையின் விமானம் மூலமாக வியாழக்கிழமை 358 பேர் நாடு திரும்பியுள்ளார்கள். இவர்களில் சிலர், கேரளாவின் கொச்சின் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டார்கள். இவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த 40 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட மீட்புப்பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக பாதுக்காப்புத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சிதான்ஷு கர் உறுதி செய்துள்ளார். அதன்படி யேமன் நாட்டின் மேற்கு பகுதி துறைமுகமான அல் ஹுடைடாவிற்கு செல்ல ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் தயார் நிலையில் உள்ளதாகவும், உரிய அனுமதி பெறப்பட்டவுடன் இந்தியர்களை மீட்க அக்கப்பல் விரையும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

ஜிபோட்டி நாட்டில் முகாமிட்டிருக்கும் மத்திய வெளியுறவுத்துறையின் இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தொடர்ந்து மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறார். இதற்கிடையே ஜிபோட்டி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான முகமது அலி யூசுப்பையும் சந்தித்த வி.கே.சிங், அவருக்கு நன்றி தெரிவித்தார்.

யேமன் நாட்டில் 4000 இந்தியர்கள் என்கிற அளவில் சிக்கி இருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, இவர்களில் ஒவ்வொருவரையும் பாதுக்காப்பாக மீட்க முயற்சிகள் மேற்கொண்டுள்ள இந்திய அரசாங்கம், அத்தோடு சேர்த்து அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டின் குடிமக்களையும் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

தீவிர போர் நடைபெறும் ஆபத்தான பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவிற்கு உதவிட சவுதி அரேபியாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

Related

உலகம் 5925171629610723628

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item