அப்துல் கலாமின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் ஜனாஸா பூரண அரச மரி­யா­தை­யுடன் ராமேஸ்­வ­ரத்தில் பேக்­க­ரும்பு எனும் இடத்தில் நேற்றுக் காலை நல்­...

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் ஜனாஸா பூரண அரச மரி­யா­தை­யுடன் ராமேஸ்­வ­ரத்தில் பேக்­க­ரும்பு எனும் இடத்தில் நேற்றுக் காலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.



அவ­ரது உட­லுக்கு பிர­தமர் நரேந்­திர மோடி, காங்­கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்­ளிட்ட தலை­வர்கள் இறுதி அஞ்­சலி செலுத்­தினர்,

முன்­ன­தாக, மோடியும், ராகுலும் டெல்­லியில் இருந்து தனித்­த­னி­யாக மது­ரைக்கு விமானம் மூலம் வந்­தனர். பின்னர் அங்­கி­ருந்து ராகுல் காரில் ராமேஸ்­வரம் புறப்­பட்டுச் சென்றார்.

பிர­தமர் மோடி, மது­ரை­யி­லி­ருந்து ஹெலி­காப்டர் மூலம் மண்­டபம் வந்­த­டைந்தார். 

மறைந்த முன்னாள் குடி­ய­ரசுத் தலைவர் அப்துல் கலா­முக்கு அவ­ரது சொந்த ஊரான ராமேஸ்­வ­ரத்தில் நேற்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள், அர­சியல் கட்­சி­யினர் கண்ணீர் அஞ்­சலி செலுத்­தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை அப்துல் கலாமின் ஜனாஸா பள்­ளி­வா­ச­லுக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. 

அங்கு குடும்­பத்­தினர் சார்பில் தொழுகை நடத்­தப்­பட்­டது. தொழு­கைக்குப் பின்னர் கலாம் உடல் நல்­ல­டக்­கத்­துக்­காக பேக்­க­ரும்பு பகு­திக்கு ஊர்­வ­ல­மாக கொண்டு செல்­லப்­பட்­டது.

வழி­நெ­டு­கிலும் பொது­மக்கள் குவிந்து அஞ்­சலி செலுத்தி வரு­கின்­றனர்.

அப்துல் கலாம் உட­லுக்கு முப்­ப­டை­யினர் இறுதி மரி­யாதை செலுத்­தினர்.

அப்துல் கலாம், கடந்த 27 ஆம் திகதி ஷில்­லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறு­வ­னத்தில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது மயங்கி விழுந்தார்.

தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 1999317932217597220

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item