தென் சூடானில் இலங்கை விமானப் படையினர்
தென் சூடானில் ஐ.நா அமைதிக்கும் படைக்கு உதவுவதற்காக 104 விமானப் படையினர் கொண்ட அணி மூன்று ஐ.17 உலங்கு வானூர்திகளுடன் அங்கு கடமையில் இணைக்கப...


உலங்கு வானூர்திகளுக்கான இரண்டு விமானிகள், பொறியிலாளர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று தென் சூடான் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
விங்க் கமாண்டர் விஷ்வ சாமந்த இந்த குழுவினருக்கு கட்டளை அதிகாரியாக செயற்படுகிறார். ஏனைய விமானப் படையினர் எதிர்வரும் 21 ஆம் திகதி புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றி பல நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றனர்.
அந்நாடுகளை மீறி இலங்கை விமானப்படையில் தகுதி பெற்றுள்ளமை முழு இலங்கைக்கும் கிடைத்த வெற்றியென விமானப்படை கூறியுள்ளது.