துடுப்பில் நீளமான விளம்பர இலட்சினையை ஒட்டிய முரளி விஜய்க்கு அபராதம்
v துடுப்பில் நீளமான விளம்பர இலட்சினையை ஒட்டியுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ...


துடுப்பில் நீளமான விளம்பர இலட்சினையை ஒட்டியுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி முடிவடைந்தது. இந்த போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவையே சந்தித்தது. இதில் இந்திய வீரர் முரளி விஜய் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 150 ஓட்டங்களைக் குவித்தார்.
போட்டியின்போது அவர் தனது துடுப்பில் ஒட்டியிருந்த விளம்பர இலட்சினையானது 9 அங்குலத்திற்கு மேல் இருந்தது. ஐசிசியின் புதிய விதிமுறைப்படி ஒரு வீரர் தனது துடுப்பில் விளம்பர இலட்சினையை 9 அங்குல நீளத்திற்கு மேல் ஒட்டக்கூடாது.
ஆனால், முரளி விஜய் வைத்திருந்த துடுப்பில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம் 9 அங்குலத்திற்கு மேல் இருந்தது. இதனால் அவரது சம்பளத்தில் 25 சதவீத தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.