கிரிக்கெட் போட்டி ஒன்றில் பகல்வேளை உணவுக்காக பட்டினி இருந்த வீரர்கள்
கிரிககெட் போட்டி ஒன்றில் பகல்போசனம் வராமை காரணமாக கிரிக்கட் வீரர்கள் அரை மணித்தியாலயம் பட்டினி இருந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. ...


தம்புள்ளை ரண்கிரி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி நேற்று நடைபெற்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு அணி வீரர்களும் விளையாடி பின்னர் பகல்நேர சாப்பாட்டுக்காக ஆட்டம் 12 மணிக்கு நிறுத்தப்பட்டது.
எனினும் இரண்டு அணி வீரர்களும் போசனசாலைக்கு சென்றபோது அங்கு சாப்பாடு தயார்ப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து 30 நிமிடங்கள் கழித்தே உணவு அங்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலேயே வீரர்களுக்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.