மஹிந்தவுக்கு மட்டும் தெரியும் புலிக்கொடி! ஜனாதிபதி மைத்திரி சாடல்
ஒவ்வொரு 24 மணித்தியாலங்களிலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தான் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெர...


ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் புலி கொடியேற்றப்பட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை.
அவ்வாறு புலி கொடி தெரிவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மாத்திரமே.
வடக்கில் புலி கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இணையத்தளங்களில் வெளியாகும் இவ்வாறான செய்தி குறித்து நேற்றைய தினம் பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவண் விஜேவர்தனவும் கருத்து தெரிவித்த போது அவர் இக்கருத்தினை முற்றிலும் நிராகிரித்திருந்தார்.