கவலைகளை தெரியப்படுத்த புதிய விலாசம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்கள் தங்கள் கவலைகளை முன்வைக்க புதிய விலாசம் ஒன்றை இன்று முதல் அறிமுகப்படுத்தி வை...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_96.html

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய “கண்ணீர் வேண்டாம்” டீ 15, நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகம், மாதிவெல என்ற விலாசத்தில் தங்கள் கவலைகளை முன்வைக்குமாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்கள், தொழிற்சங்க ஊழியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் கீழ் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்திலேயே இதனை செயற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்கு உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate