பசில் ராஜபக்ச தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட சந்தேக நபர்கள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்வதை நீதிமன்றம் நாளைய தினம் வரை ஒத்த...


தம்மை கைது செய்தமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதியரசர்கள் பியசாத் டெப், ரோஹினி மாரசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை ஆராய்ந்து.
இதன் போது பசில் ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு தேசிய நிறைவேற்றுச் சபையின் தீர்மானத்திற்கு அமைய ஏற்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும் நபர்கள் ராஜபக்ச குடும்பத்தினருடன் பகையுணர்வை கொண்டிருப்பதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. அரசியல் பழிவாங்கலுக்காக மாத்திரமே அந்த விசாரணைப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது எனவும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.