தென்மாகாண அமைச்சர் உப்புலின் கடவுச்சீட்டு முடக்கம்
தென்மாகாண அமைச்சர் டி.வி உப்புலின் கடவுச்சீட்டை முடக்கிவைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது க...


குற்றப் புலனாய்வுத்துறையினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச பிரதமரானால், தற்போது நிதிமோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் நிதிமோசடி தடுப்புப்பிரிவின் அதிகாரிகள், கல்லெறிந்துக் கொல்லப்படுவர் என்று உப்புல் கூட்டம் ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.
இதற்காக குறித்த பொலிஸ் பிரிவில் உள்ள அதிகாரிகளின் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட்டவர்கள் திரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பொலிஸூக்கு எதிரான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே விசாரணைகளுக்கு ஏதுவாக உப்புலின் கடவுச்சீட்டை முடக்குமாறு குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.