மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்பில் கடுமையான சட்டம்
இலங்கையின் மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்பில் சட்டத்தை உரியமுறையில் கடைப்பிடிக்கப் போவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_49.html

தலைக்கவசம் அணியும் விதம்ää பூச்சு செய்யப்பட்ட தலைக்கவசம், வாகனம் ஒன்றை முந்துதல் உட்பட்ட விடயங்களில் இந்த சட்டநடைமுறை கடுமையாக்கப்படவுள்ளது.
தரவுகளின்படி 2015 மே வரை இலங்கையின் வீதிகளில் 2.9 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் பாவனையில் உள்ளன.
இது வீதியில் பாவனையில் உள்ள வாகனங்களில் 53 வீதமாகும். கடந்த முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 332 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை, தலைக்கவசம் அணியாமை, அதிக வேகம், வாகனங்களை முந்துதல் போன்ற காரணங்களால் இடம்பெற்றவை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.