சட்டமுறைமையின் கீழ் இருந்தே ஷிரந்தியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது!- பொலிஸ்
சட்டமுறைமைக்குள் இருந்தே செயற்பட்டே நிதிமோசடி தவிர்ப்பு பிரிவு முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிடம் பாதுகாப்பான இடம் ஒன்றில் வாக்கு...


தேவையற்ற ஆர்ப்பாட்டங்கiளை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச ஒரு சந்தேக ஆள் அல்ல. அவரிடம் வாக்குமூலமே பெறப்பட்டது.
எனவே அவர் நிதி மோசடிப் பிரிவுக்கு சமுகம் தரவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
சில குழுக்கள் குறிப்பிட்ட தினத்தில் முன்கூட்டியே மோசடி தடுப்பு பிரிவின் முன்னால் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தன.
இந்தநிலையில் முன்னாள் முதல் பெண்மணியிடம் பாதுகாப்பான இடத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து மோசடி தவிர்ப்பு பிரிவு தமது விசாரணைகளை கைவிடாது என்றும் குணசேகர தெரிவித்துள்ளார்.