உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் கொழும்பு முதலிடத்தில்…

இலங்கையின் தலைநகர் கொழும்பு உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் முதல் இடத்தில் இருப்பதாக மாஸ்டர் கார்ட் மேற்கொண்ட வரு...


இலங்கையின் தலைநகர் கொழும்பு உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் முதல் இடத்தில் இருப்பதாக மாஸ்டர் கார்ட் மேற்கொண்ட வருடாந்த பயண ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் 10 நகரங்கள் தொடர்பில் 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதுடன் 10 நகரங்களில் 7 நகரங்கள் ஆசியாவை சேர்ந்தவை.
இதனடிப்படையில், கொழும்பு முதல் முறையாக 21 வீத வளர்ச்சியை எட்டி முதலிடத்தை பெற்றுள்ளதுடன், சீனாவின் சிச்சூவன் மாகாணத்தின் தலைநகர் செங்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகர் அபுதாபி மூன்றாம் இடத்திலும் சவூதி அரேபியாவின் ரியாத் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
வட அமெரிக்காவின் ஹூஸ்டன் 2009ம் ஆண்டு முதல் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரே ஒரு நகரமாக இருந்து வருவதுடன் இரட்டிப்பான வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது.

மாஸ்டர் கார்ட் உலக முழுவதும் உள்ள 132 நகரங்களுக்கு ஒரு வருடத்தில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை ஆராய்ந்து இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஆசியாவில் சுற்றுலா நகரங்களை மாஸ்டர் கார்ட் வெளியிட்டுள்ளது.
இதில் கொழும்பு 21.1 வீதத்தை பெற்று முதலிடத்திலும் சீனாவின் செங்டு 20.7 வீதத்தை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளன.
இதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபியும் ஜப்பானின் ஒசாகா நகரும் உள்ளன.
இதனை தவிர சவூதி அரேபியாவின் ரியாத், சீனாவின் ஷி ஹென், தாய்வானின் தாய்பே, ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெரு நாட்டின் லிமா நகரம் 9 வது இடத்திலும் வியட்நாமின் ஹூசீமின் நகரம் 10வது இடத்திலும் உள்ளன.

Fastest growing tourist cities

1. Colombo, Sri Lanka 21.1%

2. Chengdu, China 20.7%

3. Abu Dhabi, UAE 20.4%

4. Osaka, Japan 19.8%

5. Riyadh, Saudi Arabia 18.0%

6. Xi An, China 16.2%

7. Taipei, Taiwan 14.9%

8. Tokyo 14.6%

9. Lima, Peru 13.9%

10. Ho Chi Minh City, Vietnam 12.9%

Related

இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது – பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம் காணப்படுவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொது ...

​தேர்தலுக்கு 3250 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு

இம்முறை பொதுத் தேர்தலுக்கு சுமார் 3250 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிக செலவு ஏற்படும...

கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம்: ஜம்இய்யத்துல் உலமா

நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item