நாட்டை அராஜக நிலைக்குள் தள்ள முயற்சிக்கும் மகிந்த அணி! ஜே.வி.பி குற்றச்சாட்டு
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமித்து சுயாதீன ஆணைக்குழுக்கள் ...


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய தேர்தல் முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் தேர்தல் முறைமையை ஏற்படுத்த வேண்டும்.
புதிய தேர்தல் முறை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது சிரமமானது என காண்பித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தேவையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தி நாட்டை அராஜக நிலைக்குள் தள்ள முயற்சித்து வருகின்றது.
அவர்களின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காத அரசாங்கம், ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பொறுப்புக் கூறவேண்டும் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.