ரொஹிங்கியாக்களை சொந்த பிரஜைகளாக நடத்துமாறு மியன்மாருக்கு அமெரிக்கா அழுத்தம்
தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் குடியேறிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண மியன்மார் அரசு சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களை தனது சொந்த ப...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_70.html
அமெரிக்க துணை இராஜhங்கச் செயலாளர் ஆன் ரிச்சர்ட், மனித உரிமை விவகாரம் குறித்து மியர்மார் தலைவர்கள் வாய்திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரொஹிங்கியாக்கள் பல தலைமுறைகளாக மியன்மாரில் வாழ்பவர்கள் என்றும் ஏனையவர்கள் போன்று அவர்களும் பர்மா பிரiஜகளே என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து வெளியிட்ட நிலையிலேயே ரிச்சட் நேற்று புதன்கிழமை இந்த அழுத்தத்தை வெளியிட்டார். பர்மா என்பது மியன்மாரின் பழைய பெயராகும்.
எதிர்வரும் நவம்பரில் மியன்மாரில் வரலாற்று முக்கியம் வாய்ந்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மியன்மார் தலைவர்கள் ரொஹிங்கியா விடயம் தொடர்பில் வாய்திறப்பதில்லை என்று ரிச்சர்ட் குற்றம்சாட்டினார்.
மியன்மாரில் இருக்கும் ரொஹிங்கியாக்கள் உட்பட பல சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் அமைதிக்கான நோபல் விருது வென்ற எதிர்க்கட்சி தலைவர் ஆன்சாங் சூகி குரலெழுப்ப தவறி விட்டதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“பர்மாவின் அனைத்து தலைவர்களும் மனித உரிமை விடயம் மற்றும் ரொஹிங்கியாக்களுக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான நிலை பற்றி உரையாற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்ட ரிச்சர்ட், “படகுகளில் இருக்கும் மக்களால் டிசம்பர் வரை காத்திருக்க முடியாது. அவர்களுக்கு இப்போதே உதவி தேவைப்படுகிறது” என்றார்.
ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் மியன்மாரின் ரகினே மாநிலத்திற்கு சென்ற தனது பயண அனுபவம் குறித்து ரிச்சர்ட் குறிப்பிடும்போது, “எனது பயணங்களிலேயே அடக்குமுறையான சூழ்நிலையை அங்குதான் கண்டேன்” என்றார்.
மியன்மார் தனது நாட்டில் இருக்கும் 1.1 மில்லியன் ரொஹிங்கியா சிறுபான்மை மக்களை தனது பிரiஜகளாக அங்கீகரிப்பதில்லை. நாடற்றவர்களாக இருக்கும் இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் வாழ்கிறார்கள்.
இவ்வாறான 4000க்கும் அதிகமான ரொஹிங்கியா அகதிகள் அண்மைய வாரங்களில் மலே’pயா, இந்தோனே’pயா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் பலர் அந்தமான் கடற்பகுதியில் படகுகளில் தத்தளித்து வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate