செப்டெம்பரில் புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் செப்டெம்பரில் அமைப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்த...


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அன்பையும், சமாதானத்தையும் போதிக்கும் பௌத்த மாடங்களை சிலர் தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கும் மேடைகளாக மாற்றிவருகின்றமையினால் இன்று நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.
இந்த புனிதமான இடத்தில் குரோதம், கோபம், பிரிவினைவாதம் போன்ற கீழ்த்தரமான விடயங்களை அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான புனிதத்தன்மை வாய்ந்த பௌத்த மாடங்களில் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பௌத்த குருமார்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அபிவிருத்தி செயற்பாடுகள் பல நிறுத்தப்பட்டுள்ளதாக சில அரசியல்வாதிகள் தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை.
சகலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.
ஆனால் முன்னைய ஆட்சியாளர்கள் தமது பணப்பையை நிரப்பிய வேலைத்திட்டங்கள், குடும்பத்தை அபிவிருத்தி செய்த திட்டங்கள் தான் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய 100 நாள் வேலைத்திட்டத்தில் பல விடயங்களை நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் பொது மக்களுக்கு அவர்கள் விரும்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் செப்டெம்பரில் அமைக்கப்படும். அதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.