ஹிட்லரின் மனைவி அணிந்த ‘உள்ளாடைகள்’ ஏலம்: போட்டி போடும் தொழிலதிபர்கள்
ஜேர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் மனைவியான இவா பிரவுன்(Eva Braun)அணிந்த ‘உள்ளாடைகளை’ ஏலத்தில் விடப்படுவதாக செய்திகள் வெளிய...


ஹிட்லரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய மனதை கவர்ந்த ஒரே பெண் இவா பிரவுன். ஹிட்லரையே கணவனாக ஏற்ற இவா பிரவுன், அவரது கடைசி நிமிடம் வரை கூடவே இருந்து அவருக்காக தற்கொலையும் செய்து கொண்டவர்.
வரலாற்றில் ஹிட்லர் என்றால் அவருடைய மனைவியான இவா பிரவுனையும் குறிப்பிடாமல் மறைக்க முடியாது.
இத்தகையை சிறப்புகள் பெற்ற இவா பிரவுன் அணிந்த உள்ளாடைகள் தற்போது அமெரிக்காவில் உள்ள ஏலம் நிறுவனம் ஒன்றில் ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Ohio மாகாணத்தில் உள்ள Mantiques என்ற ஏல நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த உள்ளாடை, சராசரி உள்ளாடைபோல் இல்லாமல், இடுப்பு பகுதிக்கு மேல் வரை அணியக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பட்டு துணியால் நெய்யப்பட்ட இந்த உள்ளாடையில், கவர்ச்சிகரமான கைவண்ணங்களும் EB என்ற ஆங்கில எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
வியட்நாம் மற்றும் கொரியா நாடுகளில் 1945ம் ஆண்டுகளில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற Charles Snyder என்பவருக்கு ஹிட்லரின் அரண்மனைக்கு கீழே எண்ணற்ற வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்று அவற்றை அள்ளிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பொருட்களில், இவா பிரவுனின் உள்ளாடையும் ஒன்று. ஆனால், அது உண்மையில் இவா பிரவுன் அணிந்த உள்ளாடை தானா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஏல நிறுவனத்தின் மேலாளரான Ernie Scarango கூறுகையில், மிகவும் தரமிக்க துணி மற்றும் கைவண்ண வேலைப்பாடுகள் நிறைந்த அரிதான உள்ளாடை என்பதால் அதிகமானோர் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், இது மிக அதிக விலைக்கு விற்பனை ஆகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த உள்ளாடையின் ஆரம்ப விலையாக சுமார் 7,500 டொலர்கள் நிர்ணயம் செய்துள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.