விளையாட்டால் வந்த வினை: 3 சிறுவர்களின் உயிரை பறித்த ‘வீடியோ ஹேம்’
பிரான்ஸ் நாட்டில் வீடியோ ஹேமில் வருவது போன்ற விளையாட்டு உபகரணங்களை சொந்தமாக தயாரித்து விளையாடியபோது நிகழ்ந்த அசம்பாவிதத்தால் 3 சிறுவர்கள் ...
http://kandyskynews.blogspot.com/2015/06/3.html
பிரான்ஸ் நாட்டில் உள்ள Bas-en-Basset என்ற சிறிய கிராமப்பகுதியில் வசித்து வந்த 14 முதல் 16 வயதுடைய 4 சிறுவர்கள் வீடியோ ஹேம் விளையாடுவதில் கொள்ளை பிரியம் உள்ளவர்கள்.
இவர்கள் இணையதளத்தில் வரும் யுத்தம் தொடர்பான வீடியோ ஹேம்களை விரும்பி விளையாடி வந்துள்ளனர்.
இந்நிலையில், யுத்த விளையாட்டை(War game) தாங்களே சொந்தமாக விளையாட நினைத்த அவர்கள், அதற்கான போலி துப்பாக்கிகள், பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஆபத்தான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சொந்தமாக தயாரித்து வீட்டிற்குள்ளேயே விளையாடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று, வீட்டிற்குள் எளிதில் வெடித்து தீப்பிடிக்க கூடிய அமிலங்களை வீசி அதை வெடிக்க வைத்து விளையாட தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு, விளையாடியபோது அந்த பந்துகள் அமிலங்களில் கலந்து பயங்கரமாக வெடித்து அறை முழுவதும் அமிலங்களை சிதற வைத்தது.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலத்த காயமடைந்து, அறை முழுவதிலும் மூழ்கியிருந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
4வது சிறுவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களின் அஜாக்கிரதையான, பொறுப்பற்ற செயல்களால் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும், சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடும் இணையதள விளையாட்டுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என Laurent Wauquiez என்ற விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான தீவிரமான விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.