தேர்தலின் பின்னரும் பரபரப்பான மகிந்த: ஆங்கில ஊடகம்
தேர்தலில் தோல்வியடைந்த மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பரபரப்பான நிலையிலே உள்ளார் என தெரிவிக்கப...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_102.html

தேர்தலில் தோல்வியடைந்த மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பரபரப்பான நிலையிலே உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் தங்காலைக்கு அவரை பார்க்க வரும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து கலந்துரையாடுகின்றார் சரவதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது 10 வருட ஆட்சி காலத்தில் விடுதலை புலிகளை தோற்கடித்தமையே அவரது மிக முக்கிய பணியாகும்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர் முதன் முதலாக சர்வதேச தொலைக்காட்சிக்கு விசேட செவ்வி ஒன்று வழங்கியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த இரவு இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சி உண்மையா என வினவப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு பதிலளித்துள்ளார்,
ஒன்று, இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை கைப்பற்றுவது என்பது நகைச்சுவையான ஒரு கருத்தாகும் அது மாத்திரமல்ல அது ஒரு முட்டாள் தனமான கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.
நான் எவ்வித சூழ்ச்சிகளையும் மேற்கொள்ள திட்டமிடவில்லை நான் ஒருவேளை தேர்தலில் தோல்வியடைந்தால் எனது பதவியை இன்னும் ஒருவருக்கு வழங்கிவிடவே தீர்மானித்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 வருட யுத்தத்தின் போது கடைசி கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தோல்விக்கு காரணமாக அமைந்ததா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ,
இல்லை, எனக்கு எதிரான முறையில் திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதாக பதில் அளித்துள்ளார்.
யுத்தத்தின் போது பல உயிர்கள் காவு கொல்லப்பட்ட பின்பே வெற்றி கிடைத்தது. அது பயனுள்ளதாக அமைந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
ஆம். பயனுள்ளதாக அமைந்தது இல்லையேல் இன்றும் நாம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் என்று பதிலளித்துள்ளார்.
இலங்கையில் அடுத்த பிரதமராக வர முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என வினவப்பட்ட போது,
தான் அப்படி சொல்லவில்லை. ஆனால் போட்டியிட்டால் வெற்றிபெறுவது நிச்சயம் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் மகிந்த ராஜபக்ச பதில் அளித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate