‘தோல்வியிலும் இனவாதம் பேசுகிறார் முன்னாள் ஜனாதிபதி': NFGG

ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ‘நடந்து முடிந்த ேர்தலில் மக்களின் தீர்ப்பானது, இனவாதத்தினைத் தோற்கடிக்கும் தீர்ப்பாகவே அமைந்திருக...

ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ‘நடந்து முடிந்த ேர்தலில் மக்களின் தீர்ப்பானது, இனவாதத்தினைத் தோற்கடிக்கும் தீர்ப்பாகவே அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், மக்களால் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தோல்வியிலும் இனவாதம் பேசுவது கவலையளிக்கிறது’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அப்துர்ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது..

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இந்நாட்டை இன, மொழி, மத பேதங்கள் கடந்த ஒர் ஐக்கிய தேசமாக கட்டியெழுப்பக் கூடிய ஒர் பொன்னான வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்ததிருந்தது. ஆனால் அவர் அந்த தேசியக் கடமையினை செய்யவில்லை. தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்நாட்டில் இனவாதத்தை, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் ஊடாக அவர் திட்டமிட்டு வளர்த்தார்.

இந்த இனவாதம் இந்நாட்டிற்கும் இந்நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திய சேதங்களை மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.இந்நிலமை தொடர்ந்தால், நாட்டின் எதிர்காலம் எவ்வளவு தூரம் பயங்கரமானதாக அமையும் எனவும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். அதன் காரணமாகவே கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக பெரும்பான்மையான நாட்டு மக்கள் வாக்களித்து அவரை தோற்கடித்தனர்.

இந்நிலையில் தனது தோல்விக்குக் காரணம் ஈழத்தமிழ் மக்களும் முஸ்லிம்களுமே என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இதனை தென்னிலங்கையில் அவர் தெரிவித்துள்ள விதமானது, இனவாதத்தைத் தூண்டுகின்ற கருத்தாகவே இருக்கிறது. உண்மையில் அவரை தோற்கடிப்பதற்கான அதிகூடிய வாக்குகளை பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களே வழங்கியுள்ளனர். 2010ம் ஆண்டு அவர் பெற்றுக்கொண்ட அதிகப்படியான வாக்குகளையும் இந்தத் தடவை அவரது தோல்விக்கு காரணமான வாக்கு வித்தியாசத்தினையும் பார்க்கும்போது, இது தெளிவாகிறது.

கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை விடவும் ஏறத்தாள 1850000 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்றிருந்தார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இவர் 450000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். ஆக முன்னைய தேர்தலையும் நடந்து முடிந்த தேர்தலையும் ஒப்பிடும்போது, ஏறத்தாள 23 லட்சம் மக்களின் வாக்குகளை இவர் இழந்திருக்கிறார். இந்த 23 லட்சம் வாக்குகளில் மிகப்பெரும்பான்மையானவை சிங்கள வாக்காளர்களின் வாக்குகளே என்பதினை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் தெரிந்து கொள்ளமுடியும்.

கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையும் மாவட்ட ரீதியாக ஒப்பிடும்போது, 2010ம் ஆண்டுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய 284000 வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வென்றிருந்தார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இவர் 4000 வாக்கு வித்தியாசத்தில் கம்பஹாவில் தோற்றிருக்கிறார். ஆக இரண்டு தேர்தல்களுக்குமிடையில் 288000 வாக்காளர்களை அவர் இழந்திருக்கிறார். ஆனால் கம்பஹா மாவட்டம் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு மாவட்டம் அல்ல. அது போலவே கொழும்பு, குருணாகல, கண்டி, களுதற, பொலன்னறுவை மற்றும் அஅனுராதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் பெருந்தொகையான வாக்குகளை அவர் கடந்த இரு தேர்தல்களுக்குமிடையில் இழந்திருக்கிறார். கம்பஹாவைப்போலவே இந்த மாவட்டங்களும் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் அல்ல.

அதுபோலவே இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களை எடுத்துக்கொண்டாலும் கூட கடந்த 2010ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும்போது அவர் அதிகப்படியாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் 2010ம் ஆண்டு தேர்தலில் 121551 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். இந்தத்தேர்தலில் இந்த மாவட்டத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவர் பெற்றுக்கொண்ட அதிகப்படியான வாக்குகள் 104587 ஆகும். ஆக தனது சொந்த மாவட்டத்திலும் கூட தனது செல்வாக்கினை அவரால் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே யதார்த்தமாகும். அது போலவேதான் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலும் இவருக்கு எதிராக மக்கள் கணிசமாக வாக்களித்துள்ளனர்.

அந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே பெரும்பான்மையாக இம்முறை வாக்களித்திருக்கிறார்கள். அவர் தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இனவாத சூழ்நிலைகள்தான் இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். இதனை இன்னமும் புரிந்து கொள்ளாத அவர், தமிழ் முஸ்லிம் மக்கள்தான் என்னை தோற்கடித்தார்கள் என தென்னிலங்கையில் கூறி வருகிறார். இவ்வாறு தனது தோல்வியிலும் இனவாதம் பேசுகின்ற முன்னாள் ஜனாதிபதியின் கருத்து கவலையளிக்கிறது”

Related

ஐ.எஸ்.இஸ்லாத்திற்கு முரணான இயக்கம்

உலமா சபை தலைமையில் 11 அமைப்புகள் கூட்டாக பிரகடனம்ஐ.எஸ்.போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுடன் எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் அதனை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும்...

மோதல் : இது கிரிக்கெட் அல்ல...

''மஹேல நீங்கள் எங்­க­ளுக்­காக துப்­பாக்கிக் குண்­டு­க­ளையே தாங்கினீர்கள் உங்­க­ளுக்­காக நாங்கள் சில கற்­க­ளை­யா­வது தாங்க மாட்­டோமா?'' கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (19.07.2015) அன்று கெத்­தா­ராமை கிரிக்கெ...

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவனை பிடித்துள்ளனர். இது தொடர்பில் தெரிய வருவதாவது, கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். 2014ம் ஆண்டில் பல பிரிவுகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்களும் வழங்கப்பட்டன. இதில் ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி வைத்திருந்த ஒரு மாணவனை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் எவ்வாறு இம்மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி கிடைத்திருக்கும்? ஜனாதிபதியை கொல்வதற்கான திட்டமா? என பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரக்னா லங்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்ததனைத் தொடர்ந்து 134 கடற்கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item