பொலிஸ் நிதி மோசடி பிரிவு சட்டபூர்வமானது! கேள்விக்கு உட்படுத்த முடியாது!- ஜேவிபி
பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவு, ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனவே அதனை எவரும் சட்டவிரோமான அமைப்பு ...


செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைச்சரவையிலேயே இந்தப் பிரிவுக்கான அனுமதி கிடைத்துள்ளது என்பதையும் ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தாம் அப்பாவி என்ற உணர்ந்தால் அவர் இந்த பிரிவின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து தம்மை நிரபராதி என்று நிரூபிக்கவேண்டும்.
அதேநேரம் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்படக் கூடாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்பியில்லையென்றால், பிரதமர் ஐந்து அல்லது ஏழு பேரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னால் இந்த விசாரணையை நடத்தக் கோரலாம்.
இதற்காக அவர் பொதுநலவாய நாடுகளின் உதவியை கோருவது பொருத்தமானதல்ல என்று விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தேர்தல் சீர்திருத்தத்தின் போது வாக்காளர் ஒருவர் தனிப்பட்ட போட்டியாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் அதேநேரம், விரும்பிய கட்சி ஒன்றுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் என்று தமது கட்சி கோரியுள்ளதாக ஹேரத் தெரிவித்தார்.
இதற்காக இரண்டு வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.