ஐதேக அரசாங்கம் தொடர்ந்து 10 வருடங்களுக்கு நாட்டு மக்களுக்கு சேவையாற்றும்!- நவீன் திஸாநாயக்க
பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தொடர்ந்து 10 வருடங்களுக்கு நாட்டு மக்களுக்கு சேவையாற்றுமென விளையாட்டுதுறை அமை...


பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தொடர்ந்து 10 வருடங்களுக்கு நாட்டு மக்களுக்கு சேவையாற்றுமென விளையாட்டுதுறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அட்டன், கினிகத்தேனை நகரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முன்னைய அரசாங்கத்தில் தனக்கு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை எனவும், மஹிந்த ராஜபக்சவிற்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் நல்ல அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதாகவும் நவீன் திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பல மோசடிகளை செய்த மஹிந்த, பொது மக்களின் பணத்தையும் சூறையாடியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சராக இருந்த தான் அந்த மோசடிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசாங்கத்தை விட்டு விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.