முடிந்தால் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருக! ரணிலுக்கு முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அழைப்பு
கலந்துரையாட பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் ...


கலந்துரையாட பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் தனது பொறுப்பின் கீழ் நடந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் நடந்த கொடுக்கல் வாங்கல்கள் பற்றி
கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த திறைசேரியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்ற முறைகேடானது இலங்கையில் நடந்த மிகப் பெரிய கொள்ளை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலர்களுக்கும் குறைவாக உள்ளது. ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளது.
நாட்டில் இருந்த பணம் வெளியில் சென்ற பின் ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளமையால் மிகவும் பாரதூரமான நெருக்கடி உருவாகும்.
இந்த கொள்கைகளில் இருந்து விலகி நாட்டுக்கு பொருத்தமான கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.