வட,கிழக்கின் வெற்றியே மஹிந்தவின் தோல்வி: கோத்தபாய

30 வருடகால யுத்தத்தை வெற்றிக்கு கொண்டு வந்து வட,கிழக்கிற்கு வழக்கப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியட...

30 வருடகால யுத்தத்தை வெற்றிக்கு கொண்டு வந்து வட,கிழக்கிற்கு வழக்கப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார் என முன்னாள் பாதுகாப்பு பொது செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சியமைத்த கடந்த கால அரசாங்கங்கள் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் செயற்படவில்லை ஏனெனில் சுதந்திரத்தை பாதுகாப்பது நாட்டு தலைமைகளின் கடப்பாடு என அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் செயற்படவில்லை, யுத்தம் நிறைவு பெற்று 4 வருடங்களுக்குள் வட,கிழக்கு பகுதியில் சுதந்திரத்தை நாங்கள் உறுதி செய்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியதினாலேயே முன்னாள் ஜனாதிபதி தோல்வியுற்றார், அதாவது அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிராவிட்டால் அவர்கள் நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல்களில் சுதந்திரமான முடிவுகளை எடுத்திருக்கமாட்டார்கள் அல்லவா என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கேட்டுள்ளார்.

எமது ஆட்சி காலத்தில் வட,கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தங்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர் எனினும் அவர்கள் எவ்வித இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, வீதி தடைகளையும் அமைக்கவில்லை வட,கிழக்கு மக்கள் சுதந்திரமாகவே இருந்தனர்.

அம்மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்க நாங்கள் முயன்றபோதும் மக்களின் இதயத்தை எங்களால் வெல்ல முடியவில்லை எனினும் எமது அரசாங்கத்தில் அதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

வட,கிழக்கு மக்களுக்கு தேவையான பணிகளை இராணுவத்தினர் சரிவர செய்தனர்.

வட, கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதிக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருந்தமையினாலேயே அரசியல் ரீதியாக அரசாங்கமும், எதிர்கட்சியும் குறித்த மக்களின் இதயங்களை வெல்வதற்கு தவறியது.

எமது ஆட்சி காலத்தில் மக்களின் 90 வீத காணிகளை விடுவித்திருந்தோம், யுத்தம் இடம்பெற்ற போது ஆங்கு காணப்பட்ட நிலையை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் எமது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி அனைவருக்கும் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும், அத்துடன் 3 தசாப்த கால யுத்தத்தின் எதிர்மறையான விளைவுகளை 4 வருடத்தில் நீக்கி விடமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த கால அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது இவை அரசியல் இலாபத்திற்காகவே தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன், யுத்தம் நிறைவுற்ற பின்னர் யாரும் காணாமல் போகவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார்.

மேலும் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பும் வரை எனக்கு தெரியாது, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் குமரன் பத்மநாதன் விடயத்தில் அவரை நாங்கள் கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது, இதனை நாங்கள் வெளிப்படையாகவே மக்களுக்கு தெரியபடுத்தினோம், அவ்வாறிருக்கும் போது நாங்கள் ஏன் ஆட்களை கடத்தி படுகொலை செய்ய வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

லலித், குகன் ஆகியோர் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்று கூட எனக்கு தெரியாது எனவும் இவை அரசியல் நோக்கங்களுக்காகவே முக்கியத்துவம் பெற்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் இடம்பெற்ற காணாமல் போதல்கள், கொலைகள் அனைத்திற்கும் எங்கள் அரசாங்கமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னரே புலனாய்வு பிரிவினருக்கு இவை குறித்து தெரியவந்தது, தனிப்பட்ட சம்பவங்களையும், பொதுவான சம்பங்களாக பார்ப்பதற்கு மக்கள் முயற்சிப்பதினாலேயே யுத்தத்திற்கு முன்னரும், பின்னரும் ஏற்பட்டுள்ள சுதந்திரத்தை ஒப்பிட்டு பார்க்குமாறு கேட்டு கொண்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலனாய்வு பிரிவு போன்ற அமைப்புக்கள் குற்றவாளிகள் என குற்றம் சுமத்தப்படும் பட்சத்தில் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என நிரூபிப்பதற்கான வழியில்லை, மேலும் குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் நடத்துவது போன்று செய்தியாளர்கள் மாநாடுகளையும் நடத்தமுடியாது, இச்சம்பவங்கள் குறித்து பொலிஸ் மற்றும் படையினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மாத்திரமே மேற்கொள்ளமுடியும்,

மேலும் நாட்டில் இடம்பெற்ற கடத்தல்களுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வு அமைப்பினருக்கு அவ்வாறான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு திறனில்லை எனும் ஊடகங்களின் கருத்துக்களை திருத்தி கொள்ள வேண்டும், ஆனால் நாங்கள் ஊடகங்களின் பின்னால் செல்லவும் இல்லை புலனாய்வு பிரிவினருக்கு அதற்கான அனுமதியும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது அரசாங்கத்திலும் விசாரணைகள் இடம்பெற்றன, நான் பதவி காலத்தில் இருந்த போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தேன், எனினும் கொலையாளி கொலைக்கான எவ்வித ஆதாரங்களையும் விட்டுவைக்கவில்லை.

அத்துடன் லசந்த, பிரகீத் ஆகியோர் தொடர்பிலான விசாரணைகளை இடைநிறுத்தமுடியாது, அவ்வாறு நிறுத்தினாலும் ஜனாதிபதி மீண்டும் இவ் விசாரணைகளை ஆரம்பிக்கமுடியும். அதாவது தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவிற்கு என்னவாயிற்று என்பது தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த ஊடகவியலாளர் யுத்தத்திற்கு பின்னரா காணாமல் போனார் என்பது குறித்து எனக்கு தெரியாது, நான் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இத்தகைய விடயங்களுக்கு தீர்வை காணுமாறு கேட்டுகொள்வேன், ஜனக பெரேரா போன்றோர்களின் கொலைகளின் பின்னால் காணப்பட்ட மர்மங்களிற்கு நாங்கள் பின்னர் தீர்வு கண்டோம்.

லசந்த விக்ரமதுங்கவிற்கு விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்பது குறித்து நான் பேசவில்லை இவர்களின் படுகொலை தொடர்பில் தீர்வு காண்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என்பதையே நான் கூறவிரும்புகின்றேன்.

எனக்கும் இந்த படுகொலைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, நான் எனது மனசாட்சியின்படியே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்து கொண்டுள்ளார்.

Related

இலங்கை 7020205058015366965

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item