சிரியாவில் ISIS அமைப்புடன் இணைய 9 இளம் பிரிட்டன் மருத்துவ மாணவர்கள் புறப்பாடு?
சமீபத்தில் சிரியாவிலுள்ள ISIS அமைப்புடன் இணைவதற்காக சூடானில் மருத்துவம் பயின்று வந்த 20 வயதுக்குட்பட்ட 9 பிரிட்டன் மாணவர்கள் புறப்பட்டுச...

http://kandyskynews.blogspot.com/2015/03/isis-9.html

கடந்த வாரம் இந்த 9 மாணவர்களும் துருக்கி வழியாக சிரிய எல்லையைக் கடந்திருப்பதாகவும் இவர்களைத் தொடர்ந்து இம்மாணவர்களது பெற்றோரும் துருக்கிக்குச் சென்றிருப்பதாகவும் போலிசார் உறுதிப் படுத்தியுள்ளனர்.
எனினும் பிரிட்டனின் செய்தி ஊடகங்கள் சில வெளியிட்ட செய்தியில் சிரியாவில் போரில் பாதிக்கப் பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கான மருத்துவ உதவியைச் செய்வதற்காகவே இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ள போதும் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர், 9 பேர் அடங்கிய இக்குழுவை முறையாக விசாரிக்காது சிரியாவுக்குள் நுழைய துருக்கி அரச அதிகாரிகள் எவ்வாறு அனுமதித்தார்கள் என்று விசனம் தெரிவித்துள்ளார். இந்த 9 இளம் பிரிட்டன் மருத்துவ மாணவர்களது புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் இணையத் தள ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் காணாமற் போன இம்மாணவர்களை நிச்சயம் கண்டுபிடிப்போம் என பிரிட்டன் போலிஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை சமீபத்தில் ISIS போராளி அமைப்பு 100 அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு இணையத் தளத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து இத்தகவல் தொடர்பான நம்பகத் தன்மையைப் பரிசோதிப்பதற்கான விசாரணையை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் மேற்கொண்டு வருகின்றது. ISIS இன் ஹேக்கிங் பிரிவானது ஈராக், சிரியா மற்றும் யேமெனில் தமது போராளிகளுக்கு எதிராக செயற்பட்ட குறித்த இராணுவ வீரர்களது விபரங்களை விரைவில் கசிய விடுவோம் என்றும் அதன் பின் அமெரிக்காவில் ஊடுருவி இருக்கும் தமது போராளிகள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பில் அமெரிக்காவின் பாதுகாப்பு சர்வர்கள் மற்றும் தரவுத்தளங்களை ஹேக்கிங் செய்துவிட்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்து உள்ள நிலையில் அமெரிக்கா இதனை இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.