வெலே சுதா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை
சமந்த குமார என்ற வெலே சுதா மீது போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முறையில் முதலீடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ...


இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி தேவிகா தென்னகோன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணை எடுத்துகொள்ளப்பட்டது.
அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ஒரு குற்றப்பத்திரிகையில் உள்ளடக்குவது சட்டவிரோத செயல் என்றும் அவை வெவ்வேறாக இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
வெலே சுதாவுக்கு எதிரான 57 குற்றச்சாட்டுக்கள் ஒரே குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெலே சுதா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஒரே சம்பவத்தில் இந்த 57 குற்றச்சாட்டுக்களும் இருப்பதால் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் விளக்கமளித்துள்ளதுடன், அது சட்டவிரோத செயலல்ல என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இரு தரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதிபதி, எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் வெலே சுதாவை பொலிஸ் காவலிலும், அவரது மனைவி மற்றும் உறவு சகோதரியை தொடர்ந்து விளக்கமறியலிலும் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.