சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ காலமானார்
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ காலமானார். அவருக்கு வயது 91. லீ குவான் யூ கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் ...

![]() |
லீ குவான் யூ |
பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார்.
கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்கியதை அவரை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் லீ அவர்கள் உள் நாட்டிலும்,வெளி நாடுகளிலும் பலராலும் புகழப்படும் ஒரு தலைவராகவே இருந்திருக்கிறார்