கோட்டாபயவை யாரால் கைது செய்ய முடியும்? உயர் நீதிமன்றம் விளக்கம்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி பிரிவு பணிப்பாளர் மற்றும்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_435.html
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய எந்த தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென தெளிவுபடுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின் உயர் நீதிமன்ற நீதிபதி ஈரா வனசுந்தர, சரத் டீ ஆப்ரூ ஆகிய நீதிபதிகள் குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எனவே பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி பிரிவு பணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோர் தவிர்ந்த ஏனைய பிரிவினர் கோட்டாபய ராஜபக்ஷ குறித்து விசாரணை செய்ய எவ்வித தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்ற தடை காரணமாக கோட்டாபய தொடர்பில் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய இடையூறு ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்டதன் மூலம் தனது சட்டத்துறையில் அபூர்வ அனுபவத்தை பெற்றுக் கொண்டதாக நீதிபதி ஈவா வனசுந்தர நீதிமன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு வழக்கும் தனக்கு சமமானது எனக் கூறிய நீதிபதி எந்த வழக்கையும் தனக்கு விசேடமாக வழக்காக கருதுவதில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.