பிக்கு மாணவர்கள் ஐவருக்கு பிணை மேலும் 10 பேரை கைது செய்ய உத்தரவு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விள...
http://kandyskynews.blogspot.com/2015/06/10_8.html

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பிக்கு மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (08) விசாரணைக்கு வந்தபோது கிஹான் பிலபிட்டிய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி பிக்கு மாணவர்கள் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா காட்சிகள் மூலம் மேலும் 10 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.
அந்த சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate