தாய்லாந்து மன்னரை அவமதித்து பேஸ்புக்கில் எழுதியவர்க்கு 30 வருட சிறை!!

தாய்லாந்தில், மன்னரை அவமதிக்கும் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப...


thai


தாய்லாந்தில், மன்னரை அவமதிக்கும் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்தில் அரச குடும்பத்தினரை அவமரியாதை செய்வது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது.
48 வயதான போங்ஷக் ஸ்ரீபூன்பெங் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
அரசரான பூமிபோல் அதுல்யதேஜை விமர்சிக்கக்கூடாது என்ற கடுமையான சட்டம் தாய்லாந்தில் இருந்துவருகிறது.
கடந்த ஆண்டில், ராணுவப் புரட்சி நடந்ததிலிருந்து தண்டிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
ராணுவ ஆட்சி வருவதற்கு முன்பாக, அரச குடும்பத்தினரை அவமதிப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 56ஆக உயர்ந்திருப்பதாகவும் ஐ-லா என்ற குழு தெரிவிக்கிறது.
சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போங்ஷக், ஃபேஸ்புக்கில் அவர் அரசர் குறித்து எழுதிய ஆறு பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் பத்தாண்டு என சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, சிறை தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.
இந்த வாரத் துவக்கத்தில் அரசின் படத்தைக் கிழித்தார் என்ற குற்றச்சாட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
87 வயதாகும் அரசர் பூமிபோல், உலகில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அரசர் என்ற பெயரைப் பெற்றவர். மக்களால் மதிக்கப்படுபவர். ஆனால் சமீபகாலமாக உடல் நலம் குறைந்திருப்பதால், பொது நிகழ்ச்சிகளில் தென்படுவதில்லை.
அவருக்கு அடுத்து பட்டத்திற்கு யார் வருவது என்ற கவலை தாய்லாந்து மக்களுக்கு இருக்கிறது என்றாலும், இது குறித்து பொதுவெளியில் விவாதிப்பதைத் தவிர்த்துவருகின்றனர்.
ஜனநாயக அரசைக் கவிழ்த்து கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த ராணுவம், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் விமர்சனங்கள் இருந்துவருகின்றன.

Related

உலகம் 3848472979475321379

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item