பசில் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி குச...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_816.html

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் வழங்கிய உத்தரவு நியாயமற்றது என தெரிவித்து, இந்த மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மனு நீதிமன்றத்தில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், பசில் ராஜபக்ஸ தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று விசாரணையில் இருப்பதாகவும், அந்த மனு எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க தெரிவித்தார்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்குமாறு தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் ஜூன் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸ, மனு, விசாரணை ஒத்திவைப்பு


Sri Lanka Rupee Exchange Rate