சீனாவில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி
சீனாவின் யாங்ஸி நதியில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த 432 பேரின் மர...
http://kandyskynews.blogspot.com/2015/06/434.html

சீனாவின் யாங்ஸி நதியில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 432 பேரின் மரபணுப் பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபே மாகணத்தில் கடந்த திங்கட்கிழமை 456 பயணிகளுடன் பயணித்த கப்பல் புயலில் சிக்கி யாங்ஸி நதியில் விபத்துக்குள்ளானது.
இதில் 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் நீரில் மூழ்கியவர்ளை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது இன்று காலை மேலும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,
இதன்பிரகாரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 434 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்று யாங்ஸி நதிக்கருகில் மக்கள் ஒன்று திரண்டு உயிர்நீத்தவர்களுக்காக மௌனஅஞ்சலி செலுத்தினர்.


Sri Lanka Rupee Exchange Rate