20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சே...

20 ஆவது அரசியலமைப்பு  திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

இதற்காக இன்று (08) மாலை 06 மணியளவில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதியால் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், சுற்றுநிருபம் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்ததன் பின்னர், 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 7269621525152013388

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item