மகிந்த போட்டியிடுவதை எதிர்த்து 290 பேர் ஐ.தே.கவில் இணைவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளரும் தெய்யத்தகண்டிய பிரதேச சபையின் முன்ன...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளரும் தெய்யத்தகண்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தலைவருமான துமிந்த ரணவீர உட்பட பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே முன்னிலையில் அவர்கள் இன்று கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சுமார் 290 பேர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக தயா கமகே கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.