பிரபாகரனின் மைத்துனர் தேர்தலில் போட்டியிடும் சூழலை ஏற்படுத்தியவன் நான்: மகிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிடும் சூழலை தானே ஏற்படுத்தி கொடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிடும் சூழலை தானே ஏற்படுத்தி கொடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரத்கமவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடும் சூழலை எனது அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்தது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தமது அரசாங்கமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எம்.கே. சிவாஜிலிங்கமும், மகிந்த ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.