5 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த ராணுவ வீரர்: பிரான்ஸ் அரசுக்கு வலுக்கும் நெருக்கடி

ஆப்பிரக்க நாடுகளில் ஒன்றான புர்கினா ஃபசோவில் 5 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இ...

ஆப்பிரக்க நாடுகளில் ஒன்றான புர்கினா ஃபசோவில் 5 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Central African Republic-ல் உள்ள நாடுகளில் தீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 3,000 ராணுவ வீரர்களை சில மாதங்களுக்கும் முன்னர் ஐ.நாவின் உத்தரவின் பேரில் பிரான்ஸ் அரசு அனுப்பி வைத்திருந்தது.

புர்கினா ஃபசோவில் சுமார் 220 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் முகாம்கள் அமைத்து தங்கி இருந்தனர். ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள கருப்பின சிறுவர், சிறுமிகள் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், தங்களுக்கு உதவியாக வந்த சிறுமிகளை 16 ராணுவ வீரர்கள் பாலியல் சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

புகார்கள் தொடர்பான ஆதரங்கள் எதுவும் கிடைக்கபெறாததால், தன்னுடைய ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசு தயக்கம் காட்டி வந்துள்ளது.

ஆனால், பாலியல் சித்ரவதைக்கு உள்ளான 5 வயது சிறுமியின் தந்தை ஒருவர் ஆதரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது பிரான்ஸ் ராணுவ துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளை ஒரு வீரர் பாலியல் சித்ரவதை செய்ய அதனை மற்றொரு வீரர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை கைப்பற்றிய அந்த சிறுமியின் தந்தை, அதனை அந்நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் கடந்த செவ்வாய் அன்று, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தெரிய வர விரைவாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ராணுவ உயர் அதிகாரிகளுள் ஒருவரான Jean-Pierre Bosser என்பவர், புகாரில் சிக்கியுள்ள இரண்டு ராணுவ வீரர்களை தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அவர்கள் இருவர் மீதும், பிற வீரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் சித்ரவதை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Related

உலகம் 1589282379170417563

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item