சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் மஹிந்த போட்டி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் அம...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_56.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எமது கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தரப்பினர் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர்.
அந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும். நாட்டில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உண்டு என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கண்டு கொள்ள முடியும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை விசேடமாக சொல்ல வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate