தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி கோரிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்த...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_95.html

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் வரையில் சபாநாயகர் பதவியில் நீடிக்குமாறும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
அண்மையில் சபாநாயகர், ஜனாதிபதியை சந்திக்க சென்றிருந்த போது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள் அனைத்தையும் எதிர்வரும் 7ம் திகதி ஒப்படைத்து தாம் சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவசர நிலைமையொன்றின் போது நாடாளுமன்றை கூட்ட நேரிட்டால் சபாநாயகரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி வரையில் பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
தூய்மையான அரசியல்வாதி என்ற ரீதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை வகிக்கக் கூட சமால் ராஜபக்ச பொருத்தமானவர் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate