இலங்கை – பாக். கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்களிடையே கைகலப்பு : பெரும் பதற்றம்
இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் நேற்றிரவு ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் கொழும்பு ஆர்.பிரேம...


இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் நடுவில் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பின்னர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை மைதானத்தை விட்டுவெளியேற்றியுள்ளனர்.
அதன்பிறகு ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் 'பி' பிரிவு பகுதியிலிருந்து மைதானத்திற்குள் கற்கள் வீசயப்பட்டதாகவும்இ அதில் கல் ஒன்று மைதானத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரருக்கு அருகில் வந்துவிழுந்ததால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளருடன் தொடர்கொண்டு கேட்டபோது, நேற்று இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும்இ இந்த அசாதாரண நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும்இ வீரர்களின் பாதுகாப்பு கருதி மைதானம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும்இ அந்தக் குழுவின் அறிக்கை வந்தபின்னரே மேலதிகத் தகவல்கள் தெரியவரும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.


Tags: