மத்திய மாகாண சபையில் ஆட்சிமாற்றம் !
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் சகோதரர் திலின தென்னகோன் அவர்களுடன் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்ரிப...


முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் சகோதரர் திலின தென்னகோன் அவர்களுடன் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பக்கம் இணையவுள்ள நிலையில் நாளை மத்திய மாகாண சபையில் ஆட்சி மற்றும் இடம்பெறவுள்ளது.
மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றியில் மிகப்பெரிய பங்காற்றிய மனோ கணேசன் அவர்களின் ஜனாநாயக மக்கள் முன்னணியின் வேலு குமார் அவர்களுக்கு மத்திய மாகான சபையில் இந்து விவகார அமைச்சு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ரீதியில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மனோகணேசன் அவர்களது கட்சிக்கு பெறும் வரவேற்பும் ஆதரவும் உள்ள நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மனோ கண்டியில் போட்டியிட்டு மயிரிழையில் தோல்வியடைந்தார்.
மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெறும்பட்சத்தில் கண்டி மாவட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடத்தில் பலத்த மக்கள் செல்வாக்கை பெற்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் இந்து கலாசார அமைச்சராக நியமிக்கப்படுவார் என மத்திய மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாக தெரிகிறது.
