அரச ஊழியர்களுக்கு அதிகரித்த சம்பளம் அடுத்த மாதம்முதல்

மாற்றத்தை நோக்கிய மைத்ரியின் ஆட்சியில்,100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத் திட்டங்களில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,00...



download (1)

மாற்றத்தை நோக்கிய மைத்ரியின் ஆட்சியில்,100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத் திட்டங்களில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2015 பெப்ருவரி மாத சம்பளத்தை ரூபா 5,000ஆக உயர்த்துதல் என்பது முதன்மை பெறும் முதலாவது மாற்றமாகும்.

இந்த நிலையில், தற்போது, அரச நிர்வாக அமைச்சின் 06ஃ2006இலக்க சுற்றறிக்கையின்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த ஆரம்பச் சம்பளம் 2006.01.01இல் இருந்து 11,730 ரூபாவாகும்.

அரச நிர்வாக அமைச்சின் 18ஃ2012இலக்க சுற்றறிக்கையின்படி ஓய்வூதிய உரித்தற்ற விசேடபடி 2013.09.01இல் இருந்து படிகள் நீங்கலான திரட்டிய சம்பளத்தில் நூற்றுக்கு 20 வீதமாகும்.

அரச நிர்வாக அமைச்சின் 37ஃ2013இலக்க சுற்றறிக்கையின்படி ஆகக்குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரின் மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படி 2014.01.01இல் இருந்து 7,800 ரூபாவாகும்.
இதேவேளை, அரச நிர்வாக அமைச்சின் 24ஃ2014இலக்க சுற்றறிக்கைப்படி அனைத்து ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள ஏற்றங்கள் புதிய சம்பளக் கட்டமைப்பிற்குள் சேர்க்கப்படும் வரை அரசாங்க துறையினரின் அனைத்து ஊழியர்களுக்கும் 2014.11.01இல் இருந்து இடைக்காலக் கொடுப்பனவு 3000 ரூபாவாகும்.

மஹிந்த அரசில், 2014.10.24இல் சமர்ப்பிக்கப்பட்ட 2015க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த இடைக்காலக் கொடுப்பனவு மாத்திரமே தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை நோக்கிய மைத்ரி அரசில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 2015 பெப்;ருவரி மாத சம்பளத்தை ரூபா 5,000 ஆக உயர்த்துதல். சகல கொடுப்பனவுகளும், படிகளும் உள்வாங்கப்பட்டு எஞ்சிய தொகையும், அடுத்தடுத்து வரும் சம்பளத்தோடு வழங்கப்படும்.

இதற்கான முன்மொழிவுகள், புதிய அரசில், இம்மாதம் 29ஆம் திகதி புதிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

ஆகவே, இம்மாதச் சம்பளத்தில், உழைத்த சம்பள உயர்வைத்தவிர, வேறு சம்பள உயர்வுகள் ஏதுமின்றி, 2014 டிசம்பரில் பெற்ற சம்பளம் மாற்றமின்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






Related

முதலமைச்சராக ஹரின் நியமனம்

ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மைய இழந்ததையடுத்தே, பெரும்பான்மையை நிர...

மஹிந்த – கோத்தா – ஜி.எல்லுக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு

தேர்தல் முடிவுகள் வெளிவருவதை தடுக்க முனைந்தமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ், நீதியரசர் மொஹ...

மைத்ரி யுகம் !அமைச்சர்களின் பாதுகாப்புக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதி ! முப்படை பாதுகாப்பு ரத்து….ரணில் அதிரடி

அமைச்சர்களுக்கு முப்படையினர் பாதுகாப்பு வழங்க கூடாது என முப்படை தளபதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.அது தவிர அமைச்சர்களுக்கு அமைச்சு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item