சிறிசேனவும், விக்ரமசிங்கவும் பதவிகளை தக்கவைக்க முயல்கின்றனர்- ஜேவிபி குற்றச்சாட்டு
ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறுவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. பொதுத்தேர்தலை உடனட...

ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறுவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுத்தேர்தலை உடனடியாக கோரி நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியின் போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
ஊழல்களுக்கு நீதிக்கேட்டே சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தனர். எனினும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை தக்கவைப்பதில் குறியாக உள்ளனர் என்றும் அநுரகுமார குற்றம் சுமத்தினார்.